நடிகர் தனுஷ், வாத்தி திரைப்படத்திற்குப் பின் நடித்துவரும் திரைப்படம் கேப்டன் மில்லர். இப்படத்தை அருண் மாதேஸ்வரண் இயக்கிவருகிறார்.
இதில் சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ் போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
கடந்தாண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி, சென்னை, திருநெல்வேலி, தென்காசி உட்பட இடங்களில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு ஓரளவுக்கு படப்பிடிப்புகள் முடிவடைந்துளளன.
இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என்று கோலிவுட்டில் கூறப்படும் நிலையில், தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் மதுரையில் படப்பிடிப்பில் இருக்கும்போது, காலையில் ஜாக்கிங் சென்றுள்ளார். அதுகுறித்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதோ அந்த வீடியோ.