நடிகர் தனுஷின் 51 வது படத்தின் அப்டேட்!

D51 MOVIE POSTER
D51 MOVIE POSTER

நடிகர் தனுஷின் 51 வது படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் கதைகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்து படங்களை தேர்வு செய்ய ஆர்வம் கட்டுவார். அதனாலேயே நடிகர் தனுஷின் படங்கள் பொருளாதார ரீதியான வெற்றியை மட்டுமல்லாமல் மக்களுடைய வரவேற்பு மற்றும் பல விருதுகளையும் குவிப்பதற்கு காரணமாக இருக்கிறது. மேலும் நடிகர் தனுஷின் 51 வது படம் கேப்டன் மில்லர் படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மேலும் படத்தின் பிரியங்கா மோகன் கதாநாயகியாகவும் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் சிறப்பு தோற்றத்திலும் நடித்து வருகின்றனர். ஆக்சன் திரில்லர் படமாக தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷின் 40-வது பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டீசர் வெளியிடப்பட்டது. டீசரில் அதிரடிக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தை டிசம்பர் 15ஆம் தேதி வெளியிடப்பட குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கேப்டன் மில்லர் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றும், மேலும் சிறந்த கதை களத்துடன் நல்ல முறையில் உருவாகி வருவதால் படம் பெரிய வரவேற்பைப் பெரும் என்று பட குழுவினர் மத்தியில் பேசப்படுகிறது. மேலும் இந்தப் படத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கம் நடிகர் தனுஷிற்கு மிகவும் பிடித்த போனதால் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் இன்னொரு படத்தில் இணைவதற்கு நடிகர் தனுஷ் முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் வெளியாகும் 51 வது படத்தை இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இந்த படத்தை தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com