'தளபதி 68'-ல் நடிகர் ஜெய் இருக்காரா!? ஓப்பனாக பேசிய ஜெய்!
எந்த அரசல் புரசலும் இல்லாமல் சைலண்டா 'தளபதி 68' படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
'தளபதி' விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவீச்சாக நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் 'லியோ' படம் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அளிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜின் 'லியோ' படமே எந்த கியர்ல எகிறப்போகுதோ என ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்க, அடுத்து 'தளபதி 68' படத்தை வெங்கட் பிரபுதான் இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து விஜய் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

வெங்கட் பிரபு படமென்றால் அதற்கென தனி ரசிகர்கூட்டம் உண்டு. அவருடைய 'சென்னை 28', 'சரோஜா', 'மங்காத்தா', 'மாநாடு' என ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். அந்தவகையில் அவரது படத்தில் விஜய் நடிக்கிறார் என்றதுமே, தினமும் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் ஜெய் ஊடமொன்றில் பேசியபோது, அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது ''தளபதி 68' படத்துல உங்களை எதிர்பார்க்கலாமா?' என்று கேட்கப்பட்ட போது, அதற்கு பதிலளித்த அவர், 'இந்தப் படத்தில் என்னை எதிர்பார்க்கலாமா?ன்னு எனக்குள்ளேயே அந்த கேள்வியைக் கேட்டுக்கொண்டதாகவும், விஜய் அண்ணாவோட ரொம்ப நாள் கழிச்சு படம் பண்ணணும்னு தோணிச்சு. அதேபோல 'பார்ட்டி'க்கு அப்புறம் வெங்கட் பிரபு அண்ணா படத்துலயும் இன்னும் நடிக்கல. ஒருவேளை இதுல நான் இருக்கலாம். அப்படி இருந்தாலும், இப்ப என்னால சொல்ல முடியாது' என்று ஜாலியாக பதிலளித்துள்ளார்.