நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படம்!

ஜப்பான் திரைப்படம்
ஜப்பான் திரைப்படம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

'விருமன்', 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து 'ஜப்பான்' என்ற திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். இது நடிகர் கார்த்தியின் 25வது திரைப்படம். 'துப்பறிவாளன்' , 'நம்ம வீட்டு பிள்ளை' படங்களில் நடித்த அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை 'குக்கூ','ஜோக்கர்', 'ஜிப்ஸி' ஆகிய படங்களை இயற்றிய இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com