இந்தியாவில் முதல் முறையாக WWE:வீரர் ஜான் சீனாவுடன் நடிகர் கார்த்தி சந்திப்பு!

இந்தியாவில் முதல் முறையாக WWE:வீரர் ஜான் சீனாவுடன் நடிகர் கார்த்தி சந்திப்பு!

ந்தியாவில் முதல்முறையாக உலகப் புகழ்பெற்ற டபிள்யூ டபிள்யூ இ மல்யுத்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்தியா வந்துள்ள மல்யுத்த வீர ஜான் சீனாவுடன் நடிகர் கார்த்தி சந்தித்து பேசி உள்ளார்.

அமெரிக்காவை பூர்விகமாகக் கொண்ட செயல்படும் டபிள்யூ. டபிள்யூ.இ மல்யுத்த போட்டி இந்தியாவிலும் மிகப் பிரபலம். இந்தியாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வயது வரை வயது வரம்பு இன்றி டபிள்யூ டபிள்யூ இ மல்யுத்த போட்டியை பார்த்து ரசித்து வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டபிள்யூ டபிள்யூ மல்யுத்த போட்டி அதிக டிஆர்பியை கொண்ட, அதிக அளவிலான விளம்பர வரிவாயை வருவாயை ஈட்டும் நிகழ்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல்முறையாக டபிள்யூ டபிள்யூ இ மல்யுத்த போட்டியை நடத்த சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக விளம்பர தூதராக நடிகர் கார்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். விரைவில் நடைபெற இருக்கும் மல்யுத்த போட்டியில் கலந்து கொள்வதற்காக உலகப் புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் இந்தியாவிற்கு வரத் தொடங்கி இருக்கின்றனர்.

இந்த போட்டி ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் போட்டியில் பங்கேற்பதற்காக பிரபல மல்யுத்த வீரர் ஜான்சினா இந்தியா வந்திருக்கிறார். மேலும் ஜான்சினா ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரை நடிகர் கார்த்தி சந்தித்து பேசி உள்ளார்.

இந்த நிலையில் ஜான் சீனாவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள கார்த்தி, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி, சந்தித்த சில நிமிடங்கள் அனைவரையும் அன்பாக நடத்திய செயல்பாடு அற்புதம் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.அதே நேரம் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க இந்தியா முழுவதும் உள்ள மல்யுத்த போட்டி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com