சமூக வலைதளத்தில் குஷ்பு புதிய திரைப்படத்திற்கான தோற்றத்தை பதிவு செய்தார். அந்த புகைப்படம் தொடர்பாக ரசிகர்கள் தொடர்ந்து முன்வைத்த கேள்விகளைப் பார்த்து நெகிழ்ந்து குஷ்பு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தமிழ் திரை உலகின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக உள்ளவர் நடிகை குஷ்பு. இவர் தற்போது அரசியலில் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இதனால் இவர் பேசக்கூடிய பேச்சுக்கள் பதிவுகள் சமீப காலமாக அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது.
இப்படி ஒரு புறம் அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் குஷ்பு நடிகையாகவும் தனது பணியை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். படங்கள், சீரியல் தொடர்கள், நிகழ்ச்சிகள் என்று செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகர் குஷ்பு சமூக வலைதளத்தில் முடிவெட்டி இருப்பது போன்ற படத்தை வெளியிட்டு இருந்தார்.
இந்த புகைப்படம் பலரது பாராட்டுக்களை பெற்றது மட்டுமல்லாமல் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. எதற்காக முடிவெட்டினீர்கள், புதிய படத்தின் தோற்றமா, சீரியலில் உங்கள் கதாபாத்திரத்தின் தோற்றமா, என்ன நிகழ்ச்சி அது, என்று பல்வேறு வகையான கேள்விகள் தொடர்ந்து குஷ்புவை நோக்கி முன்வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் கேள்விகளை பார்த்த குஷ்பு இது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில் அவர் தெரிவித்து இருப்பது, பலரும் எனக்கு கமெண்ட் வழியாக பல்வேறு விதமான கேள்விகளை முன் வைத்து வருகின்றீர். நான் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டதாக நினைத்து நிறைய பேர் எனக்கு குறுந்தகவல்களும் அனுப்பினர்கள்.
எனது புதிய படத்தின் தோற்றத்துக்காக அப்படி குட்டையான தலைமுடி வைத்து பார்க்கப்பட்டது. தலைமுடியை ஒருபோதும் வெட்ட மாட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி. எனது முந்தையை பதிவு உங்களை தவறாக நினைக்க வைத்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.