நடிகர் மோகித் ரெய்னா, அதிதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

நடிகர் மோகித் ரெய்னா, அதிதி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் OTT போன்ற பல்வேறு ஊடகங்களில் தனது நடிப்பிற்காக ரெய்னா மிகவும் பிரபலமானவர்.

நடிகர் மோஹித் ரெய்னா, தானும் மனைவி அதிதியும் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

40 வயதான நடிகர், புதிதாகப் பிறந்த குழந்தையின் விரல்களைப் பற்றியபடி இருக்கும் புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் இடுகையில் இச்செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அந்த இடுகையில் "நாங்கள் இப்போது மூவராகி விட்டோம். இந்த உலகிற்கு எங்களது பெண் குழந்தையை வரவேற்கிறோம்” என்று ரெய்னா எழுதினார்.

அவர் செய்தியைப் பகிர்ந்து கொண்ட உடனேயே, ரசிகர்கள் மற்றும் தொழில்துறை நண்பர்கள் ரெய்னாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர்கள் தியா மிர்சா, ஸ்ரேயா தன்வந்திரி, அமித் டாண்டன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொலைக்காட்சி, திரைப்படங்கள் மற்றும் OTT போன்ற பல்வேறு ஊடகங்களில் தனது நடிப்பிற்காக ரெய்னா மிகவும் பிரபலமானவர்.

'தேவோன் கே தேவ்... மகாதேவ்', 'மகாபாரத்', 'சக்ரவர்தின் அசோக சாம்ராட்', 'உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்', 'காஃபிர்' மற்றும் 'மும்பை டைரிஸ் 26/11' ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில. அவர் ஜனவரி 2022 இல் ஒரு நெருக்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அதிதியை மணந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com