நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்!

mannangatti movie
mannangatti movie

புதுமுக இயக்குனர் டுயுட் விக்கி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்திற்கு மண்ணாங்கட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தினுடைய அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகை நயன்தாரா தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். மேலும் இவர் பல படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து சிறப்பு பெற்றவர். இதனாலேயே லேடி சூப்பர் ஸ்டார் என்றும் நயன்தாரா அழைக்கப்படுகிறார். இந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து படங்களில் நடிப்பதில் இருந்து சில மாதங்கள் விலகி இருந்தார்.

இந்த நிலையில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்திற்கான அறிவிப்பு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை பிளாக் ஷீப் யூட்யூபில் வரும் டுயுட் விக்கி இயக்குகிறார். டுயுட் விக்கி பல்வேறு இணையதள நிகழ்ச்சிகளில் சமூகக் கருத்துக்களை உள்ளடக்கிய தெளிவான பார்வையை வெளிப்படுத்தி பிரபலமடைந்தவர்.

இந்த நிலையில் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில், டுயுட் விக்கி இயக்கத்தில், நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படத்திற்கு மண்ணாங்கட்டி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்க உள்ளார்.

நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா தமிழகத்தின் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி அடைந்தது. இந்த நிலையில் டுயுட் விக்கி இயக்கத்தில் இருவரும் இணைந்து இருப்பதன் மூலம் சமூக கருத்தை உள்ளடக்கிய வெற்றி படம் தயாராக உள்ளது என்று திரை வட்டாரங்களில் பாராட்டப்படுகிறது. மேலும் படம் பெண் சமத்துவம் குறித்த கருத்துக்களை உள்ளடக்கிய படமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com