2 நாட்களில் ஜெயிலர் ரிலீஸ்.. இன்று இமயமலை செல்லும் நடிகர் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

'ஜெயிலர்' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலை செல்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், இமயமலையில் உள்ள பாபா குகைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக, தனது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு முன்பு இமயமலை பயணிப்பார். ஆனால், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சமயத்தில் 8 ஆண்டுகள் இமயமலை செல்லாமல் இருந்தார்.

கடைசியாக  2019-ல் அண்ணாத்த படம் தொடங்குவதற்கு முன் அந்த ஆண்டு அக்டோபர் மாதம் இமயமலைக்குச் சென்றார். ஒரு வார காலம் திட்டமிட்டப்பட்ட அந்த பயணத்தை மூன்று நாட்களிலேயே முடித்துகொண்டு சென்னை திரும்பினார்.கொரோனா உள்ளிட்ட காரணங்களால் இமயமலைக்கு செல்லாமல் மூன்று ஆண்டுகள் தவிர்த்து வந்த ரஜினி இன்று அங்கு செல்கிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இமயமலை புறப்படுகிறார். அங்கு ஒரு வாரம் ரஜினிகாந்த் தங்குவார் என கூறப்படுகிறது. இந்த பயணத்தில் அவருக்கு நெருக்கமான சிலரும் உடன் செல்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com