வெயில் அடிச்சாலும் குல்லாவை கழட்ட மாட்டேன்.. சிவகார்த்திக்கேயன் கலகல பேச்சு!

sivakarthikeyan
sivakarthikeyan
Updated on

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “எப்போதும் படத்தின் ரிலீஸ் குறித்து பதற்றம் இருக்கும். இப்போது படத்தை உங்களுக்கு காட்ட வேண்டும் என்ற ஆர்வம் தான் மேலொங்கியுள்ளது.

மிஷ்கின் அளவுக்கு என்னை யாரும் தமிழ் சினிமாவில் கொஞ்சியிருப்பார்களா என தெரியவில்லை. அவ்வளவு அன்பை கொடுத்திருக்கிறார். அவரின் படங்கள் எப்போதும் என்னுடைய ஃபேவரைட். அவர் கறாரான ஆள் என நினைத்திருந்தேன். ஆனால், அவர் மிகவும் ஸ்வீட். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ரசிக்கும்படியாக செய்திருக்கிறார். படம் உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சிவகார்த்திக்கேயன் இந்த குல்லா போடுவதற்கான காரணத்தை கேட்டனர். அடுத்த படம் பண்ணும் வரை குல்லாவை கழற்ற கூடாது என இயக்குனர் சொல்லியதாகவும், அதனால் வெயில் அடித்தாலும் இந்த குல்லாவை போட்டே ஆக வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com