
நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தைக்கு இடையே நீண்ட நாட்களாக இருந்த கருத்து முரண்பாடு தற்போது நீங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் சந்தித்து பேசிக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து விஜயின் தந்தை உருக்கம்.
நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இடையே அரசியல் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுவே பிறகு நடிகர் விஜய் தனது தந்தையும் அல்லது அவருடன் இருக்கும் யாரும் தேர்தலுக்கு எனது பெயரையோ புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்று பொதுவெளியில் அறிவிக்க காரணமாக மாறியது. இதன் பிறகு இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்ததாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் எஸ்.சி. சந்திரசேகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அதே நேரம் நடிகர் விஜய் லியோ திரைப்படம் பணிகளை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தன்னுடைய புதிய படத்திற்கான பணிக்காக அமெரிக்கா சென்றார்.
அந்தப் பணியையும் முடித்துவிட்டு தற்போது தமிழ்நாடு திரும்பிய நிலையில் தற்போது நடிகர் விஜய் தனது தந்தையை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது சமூகவலை பக்கத்தில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் பதிவு செய்துள்ளார். அதில், உறவும் பாசமும் மனித இனத்தின் மாமருந்து என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தினுடைய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயின் தந்தை எஸ்.சி சந்திரசேகரை சென்று சந்தித்து நலம் விசாரித்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர். அதில், பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோர் மட்டுமல்ல மொத்த குடும்பமே வலிமை பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் விஜய்க்கும் அவரை தந்தை எஸ்.ஏ சந்திரசேகருக்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து முரண்பாடு தற்போது நீங்கி ஒன்றாக இணைந்து இருப்பதாக சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் புகைப்படத்தை பகிர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.