சர்ச்சையை கிளப்பிய யோகி பாபு வீடியோ!

யோகி பாபு
யோகி பாபு
Updated on

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலில் பிரபல நடிகர் யோகி பாபு சாமி தரினத்திற்காக சென்றிருந்தார் அப்போது அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் கை கொடுக்காமல் இருந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.

சினிமாவில் கால் ஷீட் ஃபுல்லானவர் என்று மகேந்திர சிங் தோனியால் புகழப்பட்ட பயங்கர பிசியான நடிகர் யோகிபாபு. அதே சமயம், நேரம் கிடைக்கும் போதெல்லாம், முருகன் கோயிலுக்கு செல்வது அவரது வழக்கம். அந்த வகையில், கடந்த மாதம் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு நடிகர் யோகி பாபு சென்றார். அவருக்கு கோயில் சார்பில் பூரண மரியாதை வழங்கப்பட்டது. ரசிகர்களும் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். ஆனால், கோயில் அர்ச்சகர் ஒருவருக்கு யோகி பாபு கை கொடுக்க சென்ற போது, அவர் மறுக்கும் நோக்கில் வணக்கம் என கூறினார்.

பின்னர் சுதாரித்த யோகி பாபு, அவரிடம் வேறு கேள்விகளை கேட்டு சமாளித்தார். இந்நிலையில், கோயில் அர்ச்சகர் யோகி பாபுவிற்கு கை கொடுத்த மறுத்த காணொலி, இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com