ஹன்ஷிகா மோத்வானி
ஹன்ஷிகா மோத்வானி

நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஜெய்ப்பூர் அரண்மனையிலா?

சினிமாவில் அறிமுகமான உடனே முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைப்பது அபூர்வம். சில நடிகைகளுக்கு மட்டுமே அப்படியான வாய்ப்பு கிடைக்கும். அப்படி சினிமாவில் எண்ட்ரி கொடுத்த சில வருடங்களிலேயே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டின் கனவு கன்னியாக வலம் வந்தவர். ஹன்ஷிகா மோத்வானி.

இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கும் சோஹைல் கதுரியாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், அவருக்கு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம் நடக்க இருக்கிறது.

ஹன்ஷிகா மோத்வானி
ஹன்ஷிகா மோத்வானி

அதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் தற்போது தடபுடலாக செய்து வருகிறார்களாம். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் தான் ஹன்சிகாவின் திருமணம் நடக்க உள்ளது.

நடிகை ஹன்சிகாவின் திருமணத்திற்காக ஜெய்ப்பூரில் உள்ள பழங்காலத்து அரண்மனையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மாப்பிள்ளை தொழிலதிபர் என்றும் அவர் திரைத்துறையை சேர்ந்தவர் இல்லை என்று செய்திகள் பரவிவருகிறது. அவர்களது திருமணதேதி இன்னும் வெளியாகவில்லை.

இன்று ஹன்ஷிகா தனது வருங்கால கணவருடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com