நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு டும்... டும்... டும்மா?

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. அதில் அவர், தனது பள்ளி நண்பரை காதலிப்பதாகவும், இரு வீட்டாரும் அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு அடுத்த வருடம் அவர்களுக்கு திருமணம் நடக்கும் எனவும் கூறப்பட்டது

தமிழில் 'இது என்ன மாயம்' படம் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'ரஜினிமுருகன்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துப் பிரபலமானார். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறான 'மகாநடி' படத்தில் நடித்துத் தேசிய விருது பெற்றார். திரைக்கு வந்த குறுகிய காலத்திலேயே ரஜினிகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். மேலும் தற்போது இவர் ஹீரோயின்களுக்குமுக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்துதெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அடுத்தடுத்து சைரன், ராகு தாத்தா போன்ற படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது மாமன்னன், தசரா ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் தவிர, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார்.

பரபரப்பான நடிகையாக இருப்பதால் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இல்லை. இவர் குறித்து தொடர்ந்து காதல் கிசுகிசுக்கள் வந்தபடியே தான் உள்ளது எனலாம் . ஆனால் தற்போதைய இந்தச் செய்தி 'விரைவிலேயே அவர் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்' எநிக்கிற செய்தி பரவியுள்ளது. பலமுறை இப்படி கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த வதந்திகள் பரவியுள்ளன.

தற்போது இதனை கீர்த்தியின் அம்மா மேனகா மறுத்துள்ளார். திருமணம் குறித்த வதந்திக்கு விளக்கமளித்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ். கீர்த்தியின் திருமணம் குறித்த செய்தி பொய்யானது. பரபரப்புக்காக இதை செய்கிறார்கள். இது தொடர்பாக பேச வேறு எதுவும் இல்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா சுரேஷ் தெரிவித்திருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com