நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு துபாய் தொழிலதிபருடன் கல்யாணமா?

நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு துபாய் தொழிலதிபருடன் கல்யாணமா?

துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபர்ஹான் பின் லியாகத் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் நிச்சயிக்கப்பட இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வைரலாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் துபாயைச் சேர்ந்த ஃபர்ஹான் பின் லியாகத் என்ற தொழிலதிபர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார். இதனைப் பகிர்ந்த நெட்டிசன்கள் பலரும் தனது பால்யகால நண்பரான ஃபர்ஹானை நீண்டநாட்களாக கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறி வருகின்றனர். எனினும் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

முன்னதாக, கீர்த்தி சுரேஷ் தனது நண்பரான ஃபர்ஹான் பின் லியாகத்துடன் பிரகாசமான மஞ்சள் நிற ஜாக்கெட்டுகளுடன் போஸ் கொடுத்தார்.இந்த படங்களில் முதலில் ஃபர்ஹானால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோலில் வெளியிட்டிருந்தார். பின்னர், கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா டைம்லைனில் அந்த படங்களை மறுபதிவு செய்திருந்தார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக அந்த படத்தை பகிர்ந்து வைரலாக்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என பன்மொழிகளில் முத்திரை பதித்துவரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் நாயகியாக நடித்துவருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இது தவிர ’ரிவால்வர் ரீட்டா’ மற்றும் ‘சைரன்’ ஆகிய படங்களில் கீர்த்தி நடித்து வருகி. பொதுவாக சினிமா துறையில் வளர்ந்துவரும் நடிகைகளுக்கு விரைவில் கல்யாணம் என கிசுகிசுக்களை கிளப்பிவிட்டு அவர்களின் வெற்றிகரமான வாழ்க்கையை கல்யாணம் எனும் வட்டத்திற்குள் முடக்கிவிட நினைப்பது உண்டு. ஆனால், நடிகைகள் மட்டுமல்லாது ஒவ்வொருவரின் திருமணம் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவாகும். அதனால், நண்பருடனான புகைப்படத்தை வைத்துமட்டும் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு விரைவில் கல்யாணம் என முடிவுச் செய்துவிடமுடியாது. அப்படியே அவர் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டாலும் அது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதை இதுபோன்ற செய்திகளை வைரல் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com