கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் இளைய மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!
rambha

கார் விபத்தில் சிக்கிய நடிகை ரம்பாவின் இளைய மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை!

கோலிவுட்டில் ஒரு காலத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்பா உள்ளத்தை அள்ளித்தா, அருணாசலம், காதலா காதலா, நினைத்தேன் வந்தாய், த்ரீ ரோஸஸ் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

அதன்பின் 2019ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட ரம்பா, கனடாவில் தனது இரண்டு மகள்களுடன் குடும்பமாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், ரம்பாவின் இரண்டு மகள்களும் பள்ளியில் படித்து வரும் நிலையில், பள்ளியிலிருந்து அவர்களை காரில் அழைத்து வந்துள்ளார் ரம்பா. அந்தசமயம் சற்றும் எதிர்பாராத விதமாக, ரம்பாவின் கார் எதிரே வந்த காரின் மீது மோதியது.

இந்த கார் விபத்தில், ரம்பாவும், அவரது மூத்த மகளும் லேசான காயத்துடன் உயிர் தப்பிய நிலையில், இளைய மகள் சாஷா காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக நடிகை ரம்பா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது இளைய மகள் சாஷா சிகிச்சை எடுத்துவரும் புகைப்படம் மற்றும் விபத்தான காரின் புகைப்படத்தையும் பகிர்ந்து, ‘தனது பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வந்தபோது நடந்த கார் விபத்தில் குழந்தைகளுடன் நான் உயிர் தப்பினேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். இளைய மகள் சாஷா மருத்துவமனை சிகிச்சையில் இருக்கிறார். எங்களுக்காக பிரார்த்தியுங்கள்’’ எனக் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com