வைஷாலி டக்கர்
வைஷாலி டக்கர்

நடிகை வைஷாலி தற்கொலை! வாழ்க்கை விலையற்றது என வீடியோ வெளியீடு!

சமீபத்தில் தற்கொலை செய்துக் கொண்ட பிரபல பாலிவுட் சின்னத்திரை நடிகை வைஷாலி டக்கரின் யூடியூப் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏனென்றால் வாழ்க்கை விலைமதிப்பற்றது என்று மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு தற்கொலை கொண்டவர் இந்த வைஷாலி.

பாலிவுட் சின்னத்திரையில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த சீரியல்கள் சசுரால் சிமர் கா, சூப்பர் சிஸ்டர், மன்மோகினி. இந்த தொடர்களில் லீட் ரோலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வைஷாலி டக்கர்.

இவர் இந்தியில் நடித்த சசுரால் சிமர் கா சீரியல் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ‘மூன்று முடிச்சு’ என்ற பெயரில் பாலிமர் தொலைக்காட்சியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டது. இதனால் வைஷாலி டக்கர் தமிழ் ரசிகர்களுக்கிடையேயும் ப்ரபலம் தான் . இந்த வைஷாலி டக்கர் தான் சில தினங்களுக்கு முன்பு டக்கர் தற்கொலை செய்துக் கொண்டார். இவர் தற்கொலை செய்து கொண்டதிற்கான காரணம் எதோ காதல் விவகாரம் என்று சொல்லப்படுகிறது.

வைஷாலி டக்கர்
வைஷாலி டக்கர்

அவர் இறந்தபிறகு அவர் முன்பு வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் " வாழ்க்கை விலைமதிப்பற்றது.அதன் மதிப்பு தெரியாமல் மிஸ் செய்து விடாதீர்கள். அதிகம் குடித்து உடலை கெடுத்துக் கொள்ளாதீர்கள். காதல் தோல்வி, சோகம் என அளவுக்கு அதிகமாக குடிப்பதும், போதை பொருட்களை எல்லாம் பயன்படுத்துவது மிக மிக தவறு. வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்” என அட்வைஸ் செய்து இருக்கிறார். இப்படி பாசிடிவான எண்ணங்களை கொண்ட வைஷாலி தற்கொலை செய்து கொண்டதை தற்போது வரை நம்ப முடியவில்லை என ரசிகர்கள் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com