ஆதி புருஷ் படக்குழுவினர்
ஆதி புருஷ் படக்குழுவினர்

சரயு நதிக்கரையில் ஆதி புருஷ்!

Published on

-ராகவ் குமார்.

ரு படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள் அல்லது பத்திரிகையாளர்கள் முன்பு ஏதேனும் ஒரு அரங்கில் வெளியிடுவார்கள்.       

 முதல் முறையாக ஆதி புருஷ் என்ற படத்தின் டீசரையும், போஸ்டரையும் ராம ஜென்ம பூமியான அயோத்தி நகரின் சரயு நதிக்கரையில் வரும் அக்டோபர் 2 அன்று வெளியிடப் போகிறார்கள். 

ஆதி புருஷ் கதையின் நாயகனாக பிரபாஸ் நடிக்கிறார். இவரது ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிக்கிறார். பாலிவுட் டைரக்டர் ஓம் ராவத் இப்படத்தை இயக்குகிறார்.

பிரபாஸ் , ஓம் ராவத் மற்றும் கீர்த்தி சனோன்
பிரபாஸ் , ஓம் ராவத் மற்றும் கீர்த்தி சனோன்

இவர் "தன்ஹாஜி : தி அன்சிங் வாரியர்" என்ற படத்தை இயக்கி தேசிய விருது பெற்றவர். தீமைக்கும் நன்மைக்கும் இடையேயான போர் என்ற ராமாயண கதையின் கரு ஆதி புருஷ் பொருந்தும் என்பதாலும், ஆதி புருஷ் கதை ராமாயணத்திற்கு தொடர்புடையது என்ற காரணத்தாலும் அயோத்தி சரயு நதிக்கரையில் ஆதி புருஷ் டீசரை வெளியிடுகிறார்கள்.

கலாசாரம்  வளர்ந்த நதிக்கரைகளில் இப்போது சினிமா கலாசாரத்தை வளர்க்கிறார்கள். ஆதி புருஷ் வெற்றி பெற அயோத்தி ராமரின் ஆசி கிடைக்க பிராத்திப்போம்.

logo
Kalki Online
kalkionline.com