ட்ரெண்டிங் பாடலுக்கு சித்தார்த்துடன் ஆட்டம் போட்ட அதிதி ராவ்!

ட்ரெண்டிங் பாடலுக்கு சித்தார்த்துடன் ஆட்டம் போட்ட அதிதி ராவ்!

ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர் சித்தார்த். தமிழிலும் இந்தியிலும் நடித்து பிரபலமானவர். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் பிரபலம் ஆனவர் அதிதி ராவ்.

நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருகிறார்கள். இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிப்பதாக ஒரு கிசுகிசு இருந்து வருகிறது அதை நிரூபிக்கும் வகையில் இருவரும் சேர்ந்து ஒரு 'ரீல்ஸ் வீடியோ’ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஜோடி “மால டம் டம்”கா பாடலுக்கு டான்ஸ் ஆடி “டான்ஸ் மங்கிஸ், த ரீல் டீல்" என வித்தியாசமான கேப்ஷனுடன் அந்த வீடியோவைப் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளத்தில் வைரலாக  பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பல பிரபலங்கள் சிறப்பாக நடனமாடியுள்ளதாக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும், தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கும்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பிறகு நட்பு காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கும் ஜோடியாக சென்று வந்தனர். அவ்வப்போது இந்த விஷயம் கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும் அதைப் பற்றி இவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

பொதுவாக பிரபலங்கள் பற்றிய கிசுகிசு வருவது வழக்கமான ஒன்று தான். ஒரு சில பிரபலங்கள் தங்களை பற்றிய வதந்திக்கு விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைப்பார்கள். இன்னும் சிலர் என்ன தான் தன்னை பற்றி செய்திகள் வந்தாலும் அதைக்குறித்து துளியும் கண்டு கொள்ள மாட்டார்கள்.  அந்த வகையில் தற்போது புது காதல் ஜோடிகளாக வலம் வரும், அதிதி ராவ் மற்றும் சித்தார்த் ஜோடி, லிவிங் டூ கெதர் வாழ்க்கை வாழ்த்துவருவதாக கூறப்பட்ட நிலையில், இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருந்தபடி நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ மூலம் அந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

சித்தார்த் இதற்கு முன்பு மேகா என்பவரைத் திருமணம் செய்து நான்கு வருடங்களில் விவாகரத்தானவர். அதிதி ராவ் , கார்ப்பரேட் வக்கீலாக இருந்து நடிகரான சத்யதீப் மிஷ்ரா என்பவரைத் திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். 

தங்களது முதல் திருமண வாழ்க்கையிலிருந்து விவாகரத்து பெற்ற சித்தார்த் மற்றும் அதிதி ராவ் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வியும் ஒரு சிலர் அவ்வப்போது மீடியாக்களில் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com