25 வருடங்களுக்குப் பிறகு!

மும்பை பரபர!
25 வருடங்களுக்குப் பிறகு!

25 வருடங்களுக்குப் பிறகு என்ன மேட்டர்...?

டந்த 1998 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகா ‘டோலி சஜா கே ரக்னா’  இந்திப் படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின் 25 வருடங்கள் கழித்து ‘ஸ் ரீ’ என்கிற இந்திப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல மாற்றுத் திறனாளி தொழிலதிபர் ‘ஸ் ரீகாந்த் பொல்லா’ என்பவரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘ஸ்  ரீ’ யில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்த வேளையில், அவர் தனது சமூக வலைத்தளங்களில் கூறியிருப்பது:

“நான் பணியாற்றிய சிறந்த குழுவினர்களில் ஒரு டீம்தான் இந்தப் படக்குழு. இந்த அர்த்தமுள்ள சினிமாவில், எனக்கு வாய்ப்பு அளித்து, மரியாதை செய்ததற்கு துஷார் அவர் களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படத்தின் ஹீரோவான ராஜ்குமார் ராவ் அவர்களின் தீவிர ரசிகை நான். பல வருடங்களுக்குப் பின் பாலிவுட் திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களுடன் நடித்து எனது நடிப்பைப் பகிர வாய்ப்புக் கிடைத்தது.

இப்படக் குழுவினர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்ட நான் கனத்த இதயத்துடன் இவர்களிடமிருந்து விடைபெறுகிறேன்.”

‘ஸ் ரீ’யில் ஜோதிகாவை விரைவில் பார்க்கலாம்.

*********************

ஊர்வசியின் 700ஆவது படம்!

டிகை ஊர்வசியின் 700ஆவது படமான ‘அப்பத்தா’ மும்பை பட விழாவின் தொடக்க நாளன்று திரையிடப் படும் படமாகத் தேர்வு செய்யப்பட்டது பெருமைக்குரிய விஷயமாகும்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைந்து ஒன்றிய அரசு நடத்தும் திரைப்பட விழா மும்பையில் நடந்து வருகிறது. 27 முதல் 31 தேதிவரை படவிழா கொண்டாட்டம் நடைபெறும்.

இப்படம் குறித்து பிரியதர்ஷன் கூறியதாவது:

“இந்த எளிய கதையை (அப்பத்தா) என்னிடம் கொண்டு வந்ததற்காக ஜியோ ஸ்டுடியோஸ்; வைட் ஆங்கிள் கிரியேஷன் நிறுவனங்களுக்கு மிகப் பெரிய நன்றி. ஊர்வசி போன்ற அற்புதமான திறமையாளருடன், அவரது மைல் கல்லான 700ஆவது படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயம். ‘அப்பத்தா’ படம் மிகவும் வித்தியாசமானது.”

*********************

கங்கனா ரனவத் டான்ஸ் பயிற்சி!

டான்ஸ் பயிற்சி எந்தப் படத்திற்காக?

2005ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்து வெளியாகிய ‘சந்திரமுகி’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. 18 ஆண்டுகளுக்குப் பின் அதன் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை பி.வாசு இயக்கி வருகிறார்.

‘சந்திரமுகி – 2’ கிளைமாக்ஸ் பாடல்காட்சியின் ரிகர்சல் தற்போது நடந்து வருகிறது.

சந்திரமுகியாக நடிக்கும் கங்கனா ரனவத்திற்கு இதற்கான நடனப்பயிற்சியினை, நடன இயக்குனர் கலா மாஸ்டர் பயற்சியளித்து வருகிறார்.

முதல் பாகத்தில் வந்த ‘ரா – ரா!’ பாடல் போலவே இப்பாடலும் இருக்குமென கூறப்படுகிறது. நடனப் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் இணைய தளங்களில் வைரலாகி வருகின்றன.

ரிகர்சல் முடிந்தபின், இதன் படப்பிடிப்பு தொடங்க விருக்கிறது எனக் கூறப்படுகிறது.

ரா-ரா! ரா-ரா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com