25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா!

25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா!

நடிகர் சூர்யாவின் மனைவியும், பிரபல நடிகையுமான ஜோதிகா 25 ஆண்டுகள் கழித்து மீண்டும பாலிவுட்டில் நடிக்கிறார்.

பிரபல நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் நடிகை ஜோதிகா. இவர் 1998ம் ஆண்டு அக்ஷய் கண்ணா நடித்த 'டோலி சஜா கி ரஹ்னா' என்ற இந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதன்பின் அவர் நடித்த 2வது படம் 'வாலி'. இப்படத்தின் மூலம் தமிழில் அவர் அறிமுகமானாலும், அதில் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்திருப்பார். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தின் மூலம் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கவரப்பட்டார்.

அப்போதே சூர்யா-ஜோதிகா நட்பு ஆரம்பமாகி, பின்னர் காதலாக மாறி, பல எதிர்ப்புகளையும் தாண்டி, இனிதாக திருமணமும் நடந்தேறி, தமிழ்நாட்டின் மருமகளாக மாறினார். அதன்பின்னரும், தற்போதும் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும்பட்சத்தில் தொடர்ந்து நடித்தும் வருகிறார்.

அந்தவகையில், '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ராட்சஸி', 'பொன்மகள் வந்தாள்', 'உடன்பிறப்பே' என திருமணத்திற்குப் பின்னும் அவர் நடித்து வெளியான படங்கள் வெற்றிபெற்றும் வருகின்றனர்.

இந்நிலையில், அவர் தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட்டிலும் காலடி பதித்துள்ளார்.

தனது குழந்தைகளின் எதிர்காலத்திற்காககவும், பட வேலைகளுக்காகவும் தற்போது மும்பையில் செட்டிலாகியிருக்கும் நிலையில், முதன்முறையாக அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் இணைந்து நடிக்கவிருக்கும் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை விகாஸ் பால் இயக்கவிருக்கும் நிலையில், இப்படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கிறது.

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளநிலையில், மும்பை, முசோரி, லண்டன் உட்பட நகரங்களில் படப்பிடிப்பு நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் குறித்த தகவல்களை, படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com