15 நிமிட தேடலுக்குப் பின் வசமாக சிக்கிய அஜித்! பட அப்டேட் குறித்து ரசிகருக்கு அளித்த பதில்!

15 நிமிட தேடலுக்குப் பின் வசமாக சிக்கிய அஜித்! பட அப்டேட் குறித்து ரசிகருக்கு அளித்த பதில்!

கடந்த பொங்கலன்று உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்தான் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம். படம் முடிந்த கையோடு, குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வந்த நிலையில், தற்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து, ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கவ் நகரில் நடிகர் அஜித் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில், ரசிகர் ஒருவர் அவரை நேரில் சென்று சந்தித்து அடுத்த படம் குறித்து அப்டேட் கேட்டுள்ளார்.

பொதுவாகவே பட வேலைகள் முடிந்த கையோடு, பைக் ரேஸ், குடும்பத்துடன் சுற்றுலா இதுபோன்று அவ்வப்போது பொதுவாழ்க்கையையும் அனுபவித்து வருபவர் நடிகர் அஜித். இந்நிலையில், 'துணிவு' படம் கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அவர் லண்டன், போர்ச்சுகல் என சுற்றுலா சென்று வந்தநிலையில், தற்போது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் நகரில் அஜித் தங்கி இருப்பதை அறிந்தநிலையில், தஞ்சாவூரை சேர்ந்த ரசிகர் ஒருவர் அவருடைய நண்பர்களுடன் சென்று அஜித்தை சந்திக்க ஒரு கிலோமீட்டர் ஓடியே சென்று அவரை சந்தித்துள்ளாராம்.

சிறிது நேர தேடலுக்குப் பின்னர், ஒரு காபி ஷாப் ஒன்றில் அஜித் அமர்ந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். பின்னர் ரசிகர்களிடம் அஜித்தும் நலம் விசாரிக்க, அதன்பின் அவர்கள் அஜித்துடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து சற்று நேரம் நெகிழ்ச்சியுடன் அஜித்திடம் பேசிய அந்த நபர், அடுத்த பட அப்டேட் குறித்து எதாவது இருக்கா என்று கேட்டுள்ளார். அதற்கு எந்த பந்தாவும் இல்லாமல், 'எனக்கு இப்போ பிரேக் வேணும்பா' என கூலாக பதில் அளித்தாராம் அஜித்.

நடிகர் அஜித் செம ஜாலியாக எங்களுடன் பேசியதாகவும், அந்த சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் புகைப்படத்துடன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அஜித்தே இப்போது பிரேக் வேணும் என்று கூறியதால் இப்போதைக்கு 'ஏகே 62' படத்திற்கான அப்டேட் எதுவும் இப்போதைக்கு இருக்காது என்றே தோன்றுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com