ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்

கால்டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ்!

நாம் பரபரப்பாக வெளியே செல்லும் போது ஒரு சில சமயங்களில் பெண்கள் ஆட்டோ டிரைவராக இருப்பதை பார்த்திருப்போம். நாம் கடந்து செல்லும் இந்த பெண்களின் பின்புலம் பற்றி நாம் அதிகம் யோசனை செய்திருக்க மாட்டோம்.

இந்த டிரைவர் பெண்களின் வாழ்க்கையை பற்றி யோசித்து 'டிரைவர் ஜமுனா' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் கிங்ஸ்லின். 'டிரைவர் ஜமுனா' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

எப்போதும் சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா தனது கேரக்டர்க்கும், கதைக்கும் முக்கியத்துவம் இருப்பதால் ஜமுனாவாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். நாம் இன்று அதிகம் பயன்படுத்தும் கால்டாக்ஸி டிரைவராக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

டிரைவர் ஜமுனா
டிரைவர் ஜமுனா

இந்த படத்தில் ஜிப்ரான் இசையில் வெளியான பாடல் பலரை கவர்ந்துள்ளது. முறைசாரா பணிகளை செய்யும் பெண்களை பற்றிய வாழ்க்கை பதிவுகள் மிக குறைவு, டிரைவர் ஜமுனா சரியான பதிவாக இருக்கும் என எதிர்பார்ப் போம்.

இப்படத்திற்கு UA சான்றிதழ் கிடைத்துள்ளது. வித்யாசமான கதைக்களம், சரியான கலைஞர்கள் தேர்வு என நல்ல விஷயங்களை பெற்றுள்ள ஜமுனா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com