
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழகத்தில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் கதையின் நாயகியாக நடித்த 2 படங்கள் அடுத்தடுத்து நாட்களில் வெளியாகி அவரது ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.
மலையாளத்தில் இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் வெளியாகி பெண்களிடையே ஆக பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’.
நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் உருவான இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பெண் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேப்பிலை பெற்றது எனலாம்.
இது தமிழிலும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்று அதே பெயரில் தயாராகி வருகிறது. ஆர். கண்ணன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவீந்திரன் இருவரும் முக்கிய கேரக்டர.களில் நடிக்கின்றனர்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ஆர்டிசி மீடியாநிறுவனம் தயாரித்துள்ளது.
பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய ஜெரி சில்வஸ்டர் வின்செண்ட் இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் தமிழக வெளியீடு உரிமையை பிரபல நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தை டிசம்பர் 29 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
18 ரீல்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் பி சௌத்ரி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இந்த திரைப்படத்தை‘வத்திக்குச்சி’ படப் புகழ் இயக்குநர் கின்ஸ்லின் இயக்கியிருக்கிறார். இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.
இவருடன் ஆடுகளம் நரேன், கவிதா பாரதி, அபிஷேக் குமார், இளைய பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய்ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான்இசையமைத்திருக்கிறார்.
ஏற்கெனவே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளிப்போனநிலையில் தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.
தற்போது டிசம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்து போஸ்டரைவெளியிட்டுள்ளனர்.