அமிதாபுக்காக ஆட்டோ ஓட்டிய அஜய் தேவ்கன்!

அமிதாபுக்காக ஆட்டோ ஓட்டிய அஜய் தேவ்கன்!

சூப்பர் ஹிட்டான ‘கைதி’ தமிழ்ப்படத்தை, இந்தியில் ‘போலா’ என்கிற பெயரில் ரீமேக் செய்து சமீபத்தில் வெளியிட்ட அஜய் தேவ்கன் பட விளம்பர நிகழ்ச்சியின்போது, அமிதாப்பச்சன் குறித்து பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அஜய் தேவ்கன் கூறியதாவது:

1998ஆம் ஆண்டு வெளியான ‘மேஜர் சாப்’ படத்தில் நடித்த சமயம் ஒவ்வொரு இரவும் வெளியே செல்வேன். ஒருநாள் இரவு கிளம்புகையில், அமிதாப்பச்சனும் உடன் வருகிறேன் எனக் கூற, அழைத்துச் சென்றேன்.

பார்ட்டி நடக்குமிடத்தை அடைந்ததும், எங்களது டிரைவர்களைச் சாப்பிட்டுவிட்டு வருமாறு அனுப்பி வைத்தோம். பார்ட்டி முடிந்து அதிகாலை 2 மணிக்கு வெளியே வந்து பார்க்கையில், இரண்டு டிரைவர்களையும் காணவில்லை. அமிதாப்பச்சனைக் காண மெள்ள மெள்ள கூட்டம் கூடத் தொடங்கியது. அவர் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிவிடாமல் இருக்க வேண்டி, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி டிரைவரிடம் ` 500/- கொடுத்து அவரின் வாகனத்தை வாங்கினேன்.

அதில் அமிதாப் பச்சன், நஃபிஸா அலி, ஸோனாலி பெந்த்ரே ஆகியோர்களை அமர வைத்து நானே ஓட்டிச் சென்றேன். அது ஒரு சுவாரசியமான காமெடியான ரைடு ஆகும். ஆட்டோவை வாங்க எங்களின் ஹோட்டலுக்கு வந்த டிரைவரிடம் நிறைய பணம் கொடுத்தேன்.

அருமையான, மறக்க இயலாத பயணம்.

அப்படி இருந்த இவர் இப்படி மாறிட்டாங்களா?  

யாருங்க...? நடிகை கிரண்தான். ‘அன்பே சிவம்’, ‘ஜெமினி’ போன்ற படங்களில் கமலஹாசன், விக்ரமுடன் ஹீரோயினாக நடித்தவர் கிரண்.

தற்சமயம் 40 வயதாகும் கிரனுக்கு பட வாய்ப்புகள் இல்லாத காரணம், தனது சமூக வலைத்தள பக்கங்களில் படுகிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். நெட்டிசன்களில் பலர் அவரது  ஃபாலோயர்களாக, அநேகர் அவரைக் கடுமையாக விமரிசித்தனர்.

கடைசியாக விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் நடித்த பிறகு மதுவுக்கு அடிமையாகி, மனநலம் பாதிக்கப்பட்டு இவ்வாறு அரைகுறை ஆடைகளுடன் புகைப்படம் வெளியிடுவதாகவும், காதல் தோல்வி ஏற்பட்டிருப் பதாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் திடீரென சுடிதார் ஆடை அணிந்து திருப்பதிக்குச் சென்று வந்தவர், “நான் ஆன்மிக பாதையைத் தேர்வு செய்துவிட்டேன்” என ஒரு பதிவை வெளியிட ரசிகர்கள் பலர் அதற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

(மனமாற்றம் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம்.)

“நான் ஹீரோ. வில்லன் அல்ல!”
கானுக்கென்ன கோபம்?

கொரட்டாலா சிவா இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர். நடிக்கும் படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு பெயர் சூட்டு விழா இனிமேல்தான். வில்லன் வேடத்தில் நடிக்க சைப் அலிகானிடம் பேசியதாக கூறப்படுகிறது.

சைப் அலிகான் அஜய் தேவ்கனுக்கு வில்லனாக ‘தானாஜி’ இந்திப் படத்தில் நடித்தார். ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாசுக்கும் வில்லனாக நடிக்கிறார். எனவே, பான் இந்தியா படமாக ஜுனியர் என்.டி.ஆர்.இன் படம் உருவாகி வருவதால், சைப் அலிகானை வில்லனாக நடிக்க படக்குழு கேட்கையில், “நான் என்ன வில்லன் நடிகனா? நான் ஹீரோ. இதுபோன்ற கேரக்டர்களுக்கு எல்லாம் என்னை நாடி வராதீர்கள்” எனக் கடிந்துக்கொண்டாராம்.

படக்குழு அதிருப்தியுடன் ரிடர்ன்டு. தற்சமயம் பாபி தியோலிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.

(கேரக்டர் சாய்ஸ் பிரபலங்களுக்கு முக்கியம்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com