Scotlandல தல அஜித் என்ன பண்றாரு பாருங்க... செம கெத்துதான்!
அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம் உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்று வரும் நிலையில், தல அஜித் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இந்நிலையில, தல அஜித் ஸ்காட்லாந்தில் அசாத்தியமாக கார் ஓட்டும்படியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அஜித், லண்டன், போர்ச்சுகல், ஸ்காட்லாந்து என ஜாலியாக தனது பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், சில நாட்களுக்குமுன், ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கவ் நகரில் நடிகர் அஜித் காஃபி ஷாப்பில் இருக்கும்போது ரசிகர் ஒருவர் அவருடன் புகைப்படம் எடுத்தநிலையில், அது சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், தற்போது அஜித், ஸ்காட்லாந்தின் அழகான ரோட்டில் செம கெத்தாக கார் ஓட்டும் வீடியோ முதன்முறையாக வெளியாகியுள்ளது.
பார்ப்பதற்கே அழகாக இருக்கும் அந்த வீடியோ காட்சியானது, ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், தல அஜித்தின் 'AK62' படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அஜித்தின் இந்த வீடியோ வெளியானது, அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வைரலாகி வருகிறது.