அடுத்த பட ஷூட்டிங்குக்கு தயாராகும் அஜித்!

அடுத்த பட ஷூட்டிங்குக்கு தயாராகும் அஜித்!

தல அஜித்தின் நடிப்பில் 'துணிவு' திரைப்படம் பொங்கலன்று வெளிவரவிருக்கிறது. 'துணிவு' திரைப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ள நிலையில், இப்படம், அஜித் - ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் ஆகும். அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அஜித் 'துணிவு' படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் 'நல்ல படத்திற்கு அதுவே விளம்பரம்தான்' என்று சிம்பிளாக கூறியிருந்தார். இதையடுத்து, தற்போது அஜித் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தற்போது அஜித்தின் அடுத்த படமான 'AK62'வின் ஷூட்டிங் குறித்த விஷயம் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 'AK62' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கும் நிலையில், அப்படத்தின் ஷூட்டிங் ஜனவரி 17ம் தேதி துவங்க இருப்பதாகவும், தொடர்ந்து 4 மாதங்கள் ஷூட்டிங் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படம் தீபாவளிக்கு வெளியாகலாம் எனவும் அறியப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com