மீண்டும் ஐஸ்வர்யா ராயுடன்  அஜித்?

மீண்டும் ஐஸ்வர்யா ராயுடன் அஜித்?

கடந்த 11ம் தேதி வெளியான விஜயின் ’வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களுடன் தியேட்டரில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விஜய், அஜித் நடித்த படத்தில் எந்தப்படம் வெற்றிபடம் என்று சொல்ல முடியாத அளவுக்கு வசூலிலும் , விமர்சனத்திலும் இரண்டுமே சமநிலையில் இருக்கிறது.

இந்நிலையில் அஜித்தின் 62வது படத்துக்கான அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவல்கள் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்டதுதான்,

தற்போது அதிகாரப்பூர்வ தகவல் என்னவென்றால், AK62 படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் அதிக விலைக்கு வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது. அத்தனை மொழிகளிலும் உருவாகும் ‘AK62’ படத்தை திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

 இதன் காரணமாக #Ak62 என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 11 மணியளவில் ‘ஆரம்பிக்கலாங்களா’ என்ற ட்வீட்டோடு #NetflixLaEnnaSpecial என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு ரசிகர்களை யூகிக்க வைத்த நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம், அடுத்த சில நிமிடங்களிலேயே, #Ak62 ஓ.டி.டி. உரிமம் நெட்ஃப்ளிக்ஸ் பெற்றிருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதுதவிர மற்றுமொரு அப்டேட்டாக “அஜித்தின் 62வது படத்தில் ஐஸ்வர்யா ராய் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்” என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறது.

ஆனால் இது சம்பந்தமாக படக்குழுவினர் தரப்பிலிருந்து யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற எந்த தகவலும் உறுதிசெய்யப்படவில்லை.

இதற்கு முன் அஜித்தும் - ஐஸ்வர்யா ராயும் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த “கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்” படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் பிரபல மலையாள நடிகரான மம்முட்டியும், தபு, அப்பாஸ் போன்ற பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தை ராஜிவ் மேனன் இயக்கி இருந்தார்,

அண்மையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்‘ படத்தில் ‘நந்தினி‘ என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது அஜித்தின் 62வது படத்திலும் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com