‘அனல் மேலே பனித்துளி’ ஓடிடி தளத்தில் காணலாம்!

‘அனல் மேலே பனித்துளி’ ஓடிடி தளத்தில் காணலாம்!

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், ஆர்.கெய்சர் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அனல் மேலே பனித்துளி.’ எதிர்பாராத திருப்பங்களுடனும் கதைக்களத்துடனும் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில், மதி என்னும் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா ஜெரிமையா கதாநாயகியாய் நடித்திருக்கிறார். பாலியல் வன்கொடுமையில் சிக்கிய ஒரு பெண்ணின் வாழ்வையும் போராட்டத்தையும் சித்தரிக்கிறது இந்தத் திரைப்படம். சென்னையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், நீதிக்கான போராட்டத்தில் தன்னை மாற்றிக்கொள்ளாத ஒரு பெண்ணின் கடினமான வாழ்க்கையைக் கூறுவதாக அமைந்துள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து இயக்குநர் ஆர்.கெய்சர் ஆனந்த் கூறும்போது, ”வாழ்வில் துரதிருஷ்டமான நிகழ்வை ஒரு பெண் சந்திக்கும்போது அதை அவள் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைக் கூறுவதே இந்தக் கதை. இதுபோன்ற ஒரு வலுவான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியாவை கதாநாயகியாய் நடிக்கவைத்திருப்பது எங்களது அதிர்ஷ்டம். மதி எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா தன்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். சோனி லைவ் ஓடிடி தளம் நம்முடைய வட்டாரக் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகவும் வலுவானது. அந்த வகையில், ‘அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தக் கதையில் நம்பிக்கைக் கொண்டு, இத்திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்த வெற்றிமாறன் சாருக்கு மிகவும் நன்றி” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் ஆதவ் கண்ணதாசன், அழகம் பெருமாள், இளவரசு, அனுபமா குமார் மற்றும் லவ்லின் சந்திரசேகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ’அனல் மேலே பனித்துளி’ திரைப்படம் நவம்பர் மாதம் 18ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com