பிரபல நடிகை காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நடிகை காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Updated on

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அங்காடி தெரு பட துணை நடிகை சிந்து இன்று காலமானார்.

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரையிலும் கலக்கி வந்தவர் நடிகை சிந்து. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடி தெரு படம் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதன் பின்னர் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் கேன்சர் பரவியதால் 2 மார்பகங்களையும் நீக்கி பெரும் அவதியுற்று வந்தார்.

இது குறித்து பல தனியார் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார். தன்னை கருணை கொலை செய்து விடுங்கள், உதவி செய்ய யாருமில்லை என்றெல்லாம் வருத்தம் தெரிவித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டிலேயே நடிகை சிந்து காலமானார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com