விஜய் குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் இன்னொரு நடிகர்! அவருக்கு ஜோடி அதிதி... இயக்கப்போவது பிரபல அஜித் பட இயக்குநர்!

விஜய் குடும்பத்திலிருந்து அறிமுகமாகும் இன்னொரு நடிகர்! அவருக்கு ஜோடி அதிதி... இயக்கப்போவது பிரபல அஜித் பட இயக்குநர்!

நடிகர் விஜய் குடும்பத்திலிருந்து ஒரு நபர் சினிமாவில் கதாநாயகனாக நுழைய இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இப்படத்தை, பிரபல அஜித் படத்தை இயக்கியவர்தான் இப்படத்தையும் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழில் 1990களில் காதல் படங்களுக்குப் பெயர் போனவர் நடிகர் முரளி. இவர் நடித்த பெரும்பாலான படங்களில், தனது காதலியிடம் காதலைச் சொல்லாமலேயே நடித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். இவருடைய மூத்த மகன் அதர்வா முரளி. இவர் தற்போது தமிழில் பல படங்களில் நடித்து, வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவரது தம்பி ஆகாஷ் முரளி. இவர் நடிகர் விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோவின் மகளை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆகாஷ் முரளிக்கும் நடிப்பின் மீது ஆர்வம் இருக்கிறது.

இந்நிலையில், ஆகாஷ் முரளி முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தை அவரது மாமனார் சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருக்கிறாராம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருப்பதாகவும், அஜித்தின் பிரபல திரைப்படங்களான 'பில்லா', 'ஆரம்பம்' உட்பட பல வெற்றிப்படங்களை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேவியர் பிரிட்டோ ஏற்கெனவே நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படத்தை தயாரித்துள்ளார். அதனால், இப்படமும் பிரம்மாண்டமாக உருவாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் அறியப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com