ஐஸ்வர்யா -ரஜினி
ஐஸ்வர்யா -ரஜினி

ஏ.ஆர். ரஹ்மானுக்கு சலாம் போடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Published on

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் , அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஉள்ளனர்.இப்படத்திற்கு 'லால் சலாம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கிரிக்கெட் தொடர்பான கதைகளம் என்றும் பேசப்பட்டு வருகிறது.

laal salam
laal salam

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இத்திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பூஜை கடந்த 5 ஆம் தேதி போடப்பட்டதை அடுத்து, படத்தின் அடுத்தடுத்து வேலைகளில் ஐஸ்வர்யா ஈடுபட்டு வருகிறார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் லால் சலாம் படத்திற்கு இசையமைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா, தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அவர் தற்போது இயக்கி வரும் படம் லால் சலாம். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதும் திரையுலகினரிடையே பரபரப்பாக பேசப்பட்டது

இந்நிலையில் லால் சலாம் படத்துக்கான இசை பணிகளை ஏஆர் ரஹ்மான் தொடங்கியுள்ளார். அது தொடர்பான வீடியோவை ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் ரஹ்மானின் இசையை கேட்ட ஐஸ்வர்யா அவருக்கு சலாம் செய்கிறார் . இந்த வீடியோ இணையத்தில் தற்போதுடிராண்டாகி வருகிறது. லால் சலாம் திரைப்படம் வரும் 2023 ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com