ட்விட்டர் சம்பவம் : த்ரிஷாவிடம் காதல் வயப்பட்டு ட்வீட் செய்த கார்த்தி! தரமான ரீ-ட்வீட் செய்த த்ரிஷா!
காதலின் தாகத்தை மெருகேற்றி, அழகான காதல் வசனங்களை ட்விட்டரில் பதிவேற்றி, கண்ணும் கண்ணும் நோக்காமல், அழகாக தங்கள் காதலை ட்விட்டரில் பரிமாறிக்கொண்ட வந்தியத்தேவன்-குந்தவை வசனம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது எதற்காக என்பது அதை படிக்கும்போதே உங்களுக்கு புலப்படும்.
Karthi : இளையபிராட்டி… hi😊
Karthi : என்ன பதிலே இல்லை😔
Trish : என்ன வாணர்குல இளவரசே?
Karthi : தங்கள் தரிசனம் கிடைக்குமா 😍😍?
Trish : ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்
Karthi : கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?
Trish : வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா?
அப்போது காதலன் வந்தியத்தேவன்,
'ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்…' என்று கூற,
அதற்கு குந்தவையோ, 'வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்' என்று அந்த ட்விட்டர் காதல் முடிகிறது.

இதிலிருந்து உங்களுக்கே புரிந்திருக்கும்... இன்று மாலை 6 மணிக்கு 'பொன்னியின் செல்வன்-2' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'அக நக' பாடல் வெளியாக உள்ள நிலையில், அதற்கான புரோமாதான், த்ரிஷா குந்தவையாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் மாறி ட்விட்டரில் ட்வீட் மூலமாக தங்கள் காதலை, அழகிய காதல் வரிகளால் பறிமாறிக்கொண்டு பாடலுக்கு புரோமோஷன் செய்துள்ளனர்.
காத்திருங்கள்... இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே...