ஆர்யா, கௌதம் கார்த்திக் முதல்முறையாக இணையும் MR.X!
முதன்முறையாக ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில், மோஷன் போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், MR.X படத்தை, மனு ஆனந்த் எழுதி இயக்குகிறார். இவர், ஏற்கெனவே விஷ்ணு விஷால் நடித்த FIR என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர்.
தற்போது இவர் இயக்கும் MR.X, ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் நிலையில், இப்படத்தில் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதம் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தின் மோஷன் போஸ்டருடன் டைட்டில் வெளியாகியுள்ளது.

சமீபகாலமாகவே, ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இருவரின் படங்களும் தற்போது விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் நிலையில், தற்போது முதல்முறையாக இருவரும் சேர்ந்து நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடி வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படம் 2024ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.