பிக்பாஸ்
பிக்பாஸ்

கோளாறாக நடந்து கொள்ளும் அசல் கோலாறு: தனலட்சுமி கதறல்!

பிக்பாஸ் வீட்டில் அசல் கோலாறு என்ற போட்டியாளருக்கும் தனலட்சுமிக்கும் மிகப்பெரிய சண்டை வந்துள்ளது. அசல் கோலாறு தனலட்சுமியை பார்த்து பெரியம்மா, ஆன்ட்டி என்று மிகவும் மோசமான வார்த்தைகளால் உருவகேலி செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த தனலட்சுமி அசல் கோலாறை கோபமாக கத்தி சண்டை போட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார். அந்த காணொளி தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அசல் கோலாறு
அசல் கோலாறு

எப்போதும் பிரபலங்களை மட்டுமே அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துவார்கள். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசமாக மக்களிலிருந்து இரண்டுபேரை தேர்ந்தெடுத்து உள்ளே அனுப்பி இருக்கிறார்கள். அதில் ஒருவர் தனலட்சுமி. டிக்டாக் மூலமாக பிரபலமான தனலட்சுமிக்கு, பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. டிக்டாக் முடங்கிய பிறகு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். திரைத்துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வந்தார் தனலட்சுமி . அவருக்கு பிக்பாஸ் ஒரு நல்வாய்ப்பை வழங்கியது. ஆனால் உள்ளே வந்த நாள் முதல், தனலட்சுமிக்கு சண்டை சச்சரவு போய்க்கொண்டிருக்கிறது.

தனலட்சுமி
தனலட்சுமி

முதல் வாரத்திலேயே ஜி. பி முத்துவிடம் சண்டை போட்டு பிக்பாஸ் வீடே ரணகளமாகியது .இந்த நிலையில் தற்போது அசல் கோலாறு இடம் அவர் சண்டை போட்டுள்ளார். ஏற்கனவே பெண்களிடம் அசல் கோலாறு நடந்து கொள்ளும் விதம் இணையத்தில் பெரிய அளவில் சர்ச்சையாகி வருகிறது. பெண்களை அத்துமீறி தொடுவது, தடவுவது என்று அசல் கோலாறு நடந்து கொள்வதால், அவரை ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது தனலட்சுமி உருவ கேலி செய்யும் விதமாக ஆன்ட்டி என்றும், பெரியம்மா என்றும் விமர்சித்திருக்கிறார் அசல்கோலாறு. இதற்கு பிக்பாஸ் என்ன நடவடிக்கை எடுப்பார், வார இறுதியில் கமல்ஹாசன் என்ன சொல்லப்போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com