அசத்தும் அருள்நிதியின் வித்தியாசமான கழுவேத்தி மூர்க்கன்!

அசத்தும் அருள்நிதியின் வித்தியாசமான கழுவேத்தி மூர்க்கன்!

அசத்தும் அருள்நிதி, எப்போதும் திரில்லர் படங்களில் நடிக்கும் அருள் நிதி வித்தியாசமான முரட்டுத் தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பெயர் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தின் போஸ்டர்களில் அருள்நிதியை பார்க்கும் போது சீவலப்பேரி பாண்டி, மலையூர் மம்பட்டியான் படத்தின் சாயல் இருப்பதை உணர முடியும். 'ராட்சசி' புகழ் சை கௌதம்ராஜ் இயக்கும் இந்த படத்தில் , அருள்நிதி ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் டீசர் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.

நடிகர் அருள்நிதி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு வெற்றி நட்சத்திரமாக தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். மேலும், தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது.  ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தின் மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமப்புற பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். நடிகர் கார்த்தி, நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் இணைந்து வெளியிட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள இந்த டீசரில் இருந்து, ஆக்‌ஷன், காதல், குடும்ப உணர்வுகள் என படம் 100% குடும்ப பொழுதுபோக்குடன் இருக்கும் என்பதை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத் குமார் தயாரித்துள்ளார். சமீபத்தில் ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. 

துஷாரா விஜயன்   மற்றும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத் லோஹிதாஸ்வா, ராஜா சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்திருக்க யுகபாரதி பாடல்களை எழுதுதியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார் மற்றும் நாகூரன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com