அத்துமீறி மாணவன் செய்த செயல்! நடிகையின் தரமான பதிலடி! வைரல் வீடியோ!

அத்துமீறி மாணவன் செய்த செயல்! நடிகையின் தரமான பதிலடி! வைரல் வீடியோ!

'தங்கம்' பட புரமோஷன் நிகழ்வில் நடிகை அபர்ணா பாலமுரளியிடம் கல்லூரி மாணவர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலையாளத் திரையுலகில் 'Oru Second Class Yathra' படத்தின் மூலம் அறிமுகமானவர் அபர்ணா பாலமுரளி. இவர் 2017-ம் ஆண்டு வெளியான '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஒரு சில தமிழ்ப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், 2020ல் வெளியான 'சூரரைப் போற்று' படம்தான் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நற்பெயரை வாங்கிக் கொடுத்தது.

20க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது 'தங்கம்' என்ற மலையாளப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகவுள்ளது.

இதில், வினீத் ஸ்ரீனிவாசனுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நிலையில், இப்படத்தை சஹீத் அராபத் இயக்கியுள்ளார். இந்நிலையில் 'தங்கம்' படத்தின் ப்ரோமோஷனுக்காக அபர்ணா கேரளாவில் உள்ள சட்ட கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த அபர்ணாவிடம் ஒரு மாணவன் பூங்கொத்து கொடுத்து விட்டு அவர் தோள் மீது கை வைக்க முயன்றுள்ளார்.

இதை முற்றிலும் விரும்பாத அபர்ணா பாலமுரளி, உஷாராக நகர்ந்து மீண்டும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதையடுத்து, மீண்டும் மேடை ஏறிய அந்த மாணவன் அபர்ணாவிடம், 'நான் தவறாக நடக்கவில்லை. உங்கள் ரசிகனாக போட்டோ எடுக்கத்தான் வந்தேன்' என்று கூறி மன்னிப்பு கேட்டு கைகொடுக்க முயன்ற நிலையில், அந்த நபருக்கு அபர்ணா கைகொடுக்க மறுத்து தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் படுவேகமாக பரவி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com