பிரமாண்ட ஸ்க்ரீனில் அவ்தார்-2 படம் பார்க்கணுமா?

பிரமாண்ட ஸ்க்ரீனில் அவ்தார்-2 படம் பார்க்கணுமா?

சினிமாவை என்னதான் ஓடிடி தளங்களில் உடனுக்குடன் பார்த்தாலும் திரையரங்குக்குச் சென்று பார்ப்பது பல ரசிகர்களுக்கு திரில்லான விஷயம். அதிலும் பிரம்மாண்டமான 'ஐ மாக்ஸ்' தியேட்டர்களில் படங்களைப் பார்ப்பது தனிச்சிறப்பான அனுபவம்.

நாட்டில் மிகக் குறைந்த அளவில்தான் 'ஐ மாக்ஸ்' தியேட்டர்கள் உள்ளன. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரண்டே இரண்டு தியேட்டர்கள்தான் இருக்கிறது.

இந்நிலையில் நாட்டிலேயே மிகப் பெரும் சினிமா ஸ்கிரீன் கொண்ட தியேட்டராக ஐதராபாத்தில் உள்ள பிரசாத் தியேட்டர் உருவாக்கியுள்ள்னர். அங்கு 64 அடி உயரம், 101.6 அடி அகலம் கொண்ட திரைச் சீலையை தற்போது அமைத்துள்ளனர்.  இந்த பிரமாண்ட ஸ்கிரீனில் நாளை முதல் அனைத்து படங்களையும் திரையிட உள்ளதாக தியேட்டர் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளார்கள்.

அதிலு குறிப்பாக அடுத்த மாதம் வெளியாக உள்ள 'அவதார் 2' படத்தை இந்த  பிரம்மாண்டமான திரையில் பார்த்தால் மிகவும் பிரமிப்பாக இருக்கும் என்பதால், இப்போதே  சினிமா ரசிகர்கள் இந்த ஐ மாக்ஸ் திரையரங்குக்கு புக்கிங் செய்ய காத்திருக்கிறார்களாம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com