அட்டகாசமாக வெளியான புது ட்ரெய்லர்! ரசிகர்களை தண்ணீரில் நனைய வைத்த 'அவதார் 2'!

அட்டகாசமாக வெளியான புது ட்ரெய்லர்! ரசிகர்களை தண்ணீரில் நனைய வைத்த 'அவதார் 2'!

ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் வகையில் பல பிரம்மாண்ட படங்கள் ஹாலிவுட்டில் வந்திருந்தாலும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படங்கள் என்றாலே அதற்கு உலகெங்கும் தனி மவுசுதான்.

'ஏலியன்ஸ்', 'டைட்டானிக்', 'ரேம்போ', 'டெர்மினேட்டர்' உள்ளிட்ட பல பிரம்மாண்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன், 2009ல் அனைவரையும் வியந்து பார்க்கவைக்கும் அளவுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரம்மாண்டமாக இயக்கிய படம்தான் 'அவதார்'.

வேற்றுகிரகத்திற்கு செல்லும் மனிதர்கள் அங்குள்ள இயற்கை வளத்தைக் கண்டு அதை அபகரிக்க நினைக்க, அதை எடுக்கவிடாமல் தடுக்கும் அங்கு வாழும் நீல நிற, உயரமான வித்தியாசமான மனிதர்கள். இவர்களுக்கிடையே நடக்கும் போரையும், காதலையும் மையப்படுத்தி பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டதுதான் 'அவதார்' திரைப்படம். முதல் பாகமாக வெளியான 'அவதார்' உலகளவில் வசூலில் அள்ளிக் குவித்தது.

இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்நிலையில் 13 வருடங்களுக்குப் பின், வரும் டிசம்பர் 16ம் தேதி திரையரங்குகளில் உலகெங்கும் பிரம்மாண்டமாக 'அவதார்-2' Avatar: The Way of Water திரைப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே இப்படத்தின் டிரைலர்கள் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று புதிதாக ஒரு டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்போது வெளியாகியிருக்கும் இந்த டிரைலர் முன்பு வெளியானதை விட இரட்டிப்பு மடங்கு பிரமிப்பையும், படம் எப்போது வரும் என்ற ஆர்வத்தையும் அதிகரித்து வருகிறது.

இந்த டிரைலரில், கடலுக்கு அடியில் காட்டப்படும் ஒவ்வொரு காட்சியுமே பிரம்மாண்டாக அமைந்துள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரையில் அனைவரும் பார்க்கும்விதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அதுமட்டுமல்லாமல் 13 வருடங்கள் கழித்து பெரும் எதிர்பார்ப்புடன் இப்படம் வருகின்ற டிசம்பர் 16ம் தேதியன்று வெளியாவதால் வசூலில் அள்ளிக் குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com