அயோத்தி திரைப்படம் பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகிறது !

அயோத்தி திரைப்படம் பிரபல ஒடிடி தளத்தில் வெளியாகிறது !

அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்திருந்தார். மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே பெருமளவு வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநரும், நடிகருமான சசி குமார், ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்று, பல வருடங்களாக போராடி வந்தார். அந்த கனவு, தற்போது அவர் நடித்துள்ள அயோத்தி படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.கடந்த 3-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம், 3 வாரங்களாகியும், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது அயோத்தி திரைப் படம்.

இந்த படத்தின் வெற்றி விழா, படக்குழு சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சசி குமார், இயக்குநர் மந்திர மூர்த்திக்கும், தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், தங்க சங்கிலியை பரிசளித்தார். இதற்கிடையே, இந்த படம் வரும் ஜி 5 ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி மற்றும் தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில், அஜய் தேவ்கனும், தெலுங்கில், வெங்கடேஷ்-ம் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு மொழிகளிலும், அயோத்தியா என்று தான் பெயர் வைக்க உள்ளனர்.

அயோத்தி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் சந்தோஷத்தில் இருக்கும் சசிகுமார், அடுத்த அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, எழுத்தாளர் வேல ராம மூர்த்தி இயக்கிய குற்ற பரம்பரை என்ற நாவலை, திரைப்படமாக எடுக்க உள்ளாராம்.

அயோத்தி திரைப்படம் வரும் மார்ச் 31-ஆம் தேதி பிரபல ஜி 5 ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com