‘பிகினிங்’ -ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !

‘பிகினிங்’ -ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !

‘பிகினிங்’ என்ற வித்தியாசமான படத்தை, டைரக்டர் என்.லிங்குசாமி உலகமெங்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். ஏற்கனவே மஞ்சப் பை, கோலி சோடா, சதுரங்க வேட்டை போன்ற படங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.

இந்தப் படம் 40 நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறது.

Lefty Manual Creations தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஆசியாவில் முதல் முறையாக ‘ஸ்பிளிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளைக் காட்டும் தொழில்நுட்பம் இந்தப் படத்தில் பயனாகியிருக்கிறது.

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com