தெலுங்கில் சிறந்த அறிமுக இயக்குனர் விருது - தட்டித்தூக்கிய  பிரதீப் ரங்கநாதன்

தெலுங்கில் சிறந்த அறிமுக இயக்குனர் விருது - தட்டித்தூக்கிய பிரதீப் ரங்கநாதன்

தெலுங்கில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். 

2019ல் வெளியான ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் கதைக்களம் கொண்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி முதல்முறையாக ஹீரோவாக நடித்திருந்த படம் ‘லல் டுடே’. 

இன்றைய காதலும் காதலர்களை பற்றியும் வெளியான திரைப்படம் லவ் டுடே. இந்த படம் கோலிவுட்டில் மிகப்பெரும் வசூல் சாதனையை படைத்தது.

ஏஜிஎஸ். கல்பாத்தி எஸ் அகோரம் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் வெறும் 4 கோடியில் எடுக்கப்பட்டு 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்க நாதனுக்கு தெலுங்கு திரையுலம் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை கொடுத்து கௌரவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிவிட்டது செல்ஃபோன். அதனால் நன்மையும் அதிகம், பல தீமைகளும் அதிகம். செல்ஃபோன் பல அனாவசியங்களையும் தன்னுள்ளே வைத்திருக்கிறது என்பதையும் அதனால் ஏற்படும் சண்டைகள், குழப்பங்கள், வாழ்க்கையில் உண்டாக்கும் பிரச்னைகளையும் காட்சிகளின் மூலம் அழகாகச் சொல்லியிருந்தார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். ‘மாடர்ன் டே’ காதலையும் நம்பிக்கையற்றுத் தடுமாறும் சந்தேகத்தையும் ஆழமாகவே பேசியிருந்தது இப்படம். அதற்குச் சுவாரசியமான, தெளிவான திரைக்கதையும் கதாபாத்திரத் தேர்வும் பலமாக உதவி இருக்கின்றன.

 இந்த படத்தில் இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 2k கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்நிலையில் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெற்றுள்ளார். இந்த விருதினை மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது கையால் பிரதீப்பிற்கு கொடுத்தார். இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com