பரத்-வாணி போஜன்
பரத்-வாணி போஜன்

பரத்-வாணி போஜன் 'லவ்'

திருமணத் திற்கு முந்தய காதல்,திருமணத்திற்கு பின்பு உள்ள காதல் என இருவகை காதல்கள் உள்ளன. திருமணத்திற்கு பின்பு கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதல் மிக முக்கியமானது. இதுதான் வாழ்க்கை சுமையா சுகமா என்று தெரிய வரும். கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலை வைத்து லவ் என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் RP பாலா.

ஒவ்வொரு காலகட்டத்திலும் சினிமாவில் பிரபலமாக பேசப்படும் திரை ஜோடிகளாக வலம் வருவார்கள். கமல் -ஸ்ரீ தேவி,ரஜினி -கௌதமி, பிரபு -குஷ்பு இப்படி சில.

இது போல பரத்-வாணி போஜன் மக்கள் விரும்பும் ஜோடிகளாக மாறிக்கொண்டு வருகிறார்கள். இவர்கள் இணைந்து நடித்த மிரள் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த லவ் படத்தில் ஒன்று சேர்க்கிறார்கள்.

love movie
love movie

போஸ்டரில் இவர்களின் திரை வேதியல் (screen chemistry ) மிக நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சொல்கிறார்கள். பரத் வாணி கணவன் மனைவி யாக நடிக்கும் இந்த படத்தின் கதை கிரைம் திரில்லர் வகையை சேர்ந்தது.

இந்த படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய வாணி போஜன் "ஒரு காட்சியில் பரத் சாரை அறைய வேண்டும் நான் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக நிஜமாகவே அடித்து விட்டேன். சாரி பரத் சார் "என்று பரத்திடம் மன்னிப்பு கேட்டார். முத்தையாவின் ஒளிப்பதிவில் லவ் வேறொரு காதலையும், வாழ்க்கையையும் சொல்லும் படமாக இருக்கும் என்கிறார் டைரக்டர்.

பரத்திற்கு இது ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடதக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com