யானைப் படத்திற்கு ஆதரவு கோரும் பாலிவுட் நடிகை!
தி எலிபேண்ட் விஸ்பரர்ஸ் (The Elephant Whisperers) 2022 டிசம்பரில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இந்த டாகுமெண்டரி திரைப்படம் அநேகம் பேரால் பாராட்டப்பட்டது.
தென்னிந்தியாவில் உள்ள பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினர், ரகு என்ற அனாதை குட்டி யானையைப் பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனர், மனிதனுக்கும், விலங்கு உலகத்திற்கும் இடையிலான தடையை தாண்டும் வேறு எந்த ஒரு குடும்பத்தையும் போலவே இவர்களும் தங்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்குகிறார்கள். அவர்களுக்கும், யானைகளுக்குமிடையிலான பந்தத்தைப் பற்றிப் பேசும் இக்குறும்படம் 95 ஆவது அகாடமி அவார்ட்ஸ் விழாவில் ஷார்ட் ஃபிலிம் கேட்டகிரியில் சிறந்த ஆவணக் குறும்பட விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஆவணப் படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். படத்திற்கான ஒளிப்பதிவை கரண் தப்ளியால்; கிரிஷ் மகிஜா; ஆனந்த் பன்சால்; கார்த்திகி கோன்சால்வ்ஸ் மூவரும் இணைந்து பகிர்ந்து கொண்டிருந்தனர். நேரடியாகத் தமிழில் வெளியான இந்த ஆவணப்படம் வெளியான சமீபத்திலேயே பலரால் சிறந்த முறையில் உள்வாங்கப்பட்டிருந்தது. படத்தின் இசை ஸ்வென் ஃபால்கனர்.
இந்த ஆவணப் படத்தைப் பார்த்து விட்டு அதைப் பற்றிப் புகழ்ந்து பேசியதோடு சமூக ஊடகங்களிலும் இத்திரைப்படத்தின் விருது வெற்றிக்காக குரல் கொடுத்திருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா ஜோனஸ். ‘துதிக்கை முழுவதும் உணர்வுகள் நிரம்பியதான’ இந்த ஆவணப் படம் மட்டுமே, நான் சமீபத்தில் பார்த்து ரசித்த ஆவணப்படங்களில் மிகச் சிறந்த இதயம் தொட்ட ஒன்றாக இருந்தது என்றிருக்கிறார் ப்ரியங்கா.