பாலிவுட் பூமராங்!

பாலிவுட் பூமராங்!

மலையாளம் To இந்தி!

விபின்தாஸ் இயக்கத்தில் பாசில் ஜோசப் நடித்து மலையாளத்தில் வெளியாகி, ஹிட்டாகிய ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!’ படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் தர்ஷனா ராஜேந்திரன், அஜீ வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு
அங்கித் மேனன் இசையமைத்துள்ளார். ` 6 கோடியில் உருவான இப்படம் 50 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. படம் OTTயில் வெளியானபின் பல்வேறு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

குடும்ப வன்முறையைப் பேசும் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை அமீர்கான் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விபின்தாஸே இந்தியில் இயக்குவாரெனவும் கூறப்படுகிறது.

‘தங்கல்’ இந்திப்படம் மூலம் பிரபலமடைந்த நடிகை பாத்திமா சனா ஷேக், தர்ஷ்னா ராஜேந்திரன் மலையாளத்தில் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பாரெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

(‘ஸக்ஸஸ் ஆக வாழ்த்துவோம்.)

சிகரெட் ஊதும் அனன்யா

ந்தி படங்களில் ஹீரோயினாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். சமீபத்தில் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘லைகர்’ படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கில் அறிமுகமானார். எதிர்பார்த்த வசூலை இப்படம் எட்டாததால், அனன்யா பாண்டே தற்போது பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். அவரது குடும்பத்தில் நடந்த திருமண கொண்டாட்டங் களில், அனன்யா தனது தோழிகளுடன் சேர்ந்து சிகரெட்டுகளை ஊதித் தள்ளியிருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சமூக வலைத்தளத்தில் இது வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் ‘அனன்யாவுக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா?’ என்று விமரிசித்து வருகின்றனர். நடிகர் பாண்டேயின் மகள் இப்படி இருப்பாரென நாங்கள் நினைக்கவில்லையென்றும் கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

(நெட்டிசன்களுக்கு என்னவெல்லாம் கவலைகள்! பாவம்!)

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com