பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் லேடி சூப்பர் ஸ்டாரும்!

பாலிவுட் சூப்பர் ஸ்டாரும் லேடி சூப்பர் ஸ்டாரும்!

யாருங்க? ஷாருக்கானும் நயன்தாராவும்தான் ‘ஜவான்’ படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தில் ஷாருக்கான் நடிப்பதுடன் தயாரிக்கவும் செய்கிறார். கோலிவுட்டைக் கலக்கி வந்த அட்லி பாலிவுட் சென்று முதல் படத்திலேயே ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.

பாலிவுட் செல்கையிலேயே தனது தோழியும், ராசியான ஹீரோயினுமான நயன்தாராவை அழைத்துச் சென்று ஷாருக்கானுக்கு ஜோடியாக ஆக்கிவிட்டார் அட்லி. ஷாருக்கான் விடுவாரா? தனது ராசியான ஹீரோயின் தீபிகா படுகோனேயே கெளரவ வேடத்தில் நடிக்க வைத்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனை ‘ஜவானில்’ நடிக்க அட்லி கேட்கையில், அவர் ‘புஷ்பா 2’வில் (இரண்டாம் பாகம்) கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் காரணமாக, ‘ஜவான்’ படத்திற்கு அட்ஜஸ்ட் செய்து தேதி கொடுக்க இயலாத நிலையில் உள்ளதாக கூறியுள்ளார். ஹைதராபாத், விசாகப்பட்டினம் என பறந்துகொண்டிருக்கிறார். ரசிகர்களுக்கு இது சற்று ஏமாற்றமே.

‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு புனே, மும்பை, ஐதராபாத்தையடுத்து சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள வந்த ஷாருக்கான் நயன்தாரா வீடு சென்று அவரின் இரட்டைப் பிள்ளைகளைப் பார்த்தார்.

ஷாருக்கான் வந்த செய்தியறிந்து ரசிகர்கள் அங்கே கூடிவிட்டனர். ஷாருக்கான் கிளம்பிச் செல்கையில், ‘குட்பை’ சொல்லி நயன்தாரா கன்னத்தில் முத்திட்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது.

நயன்தாராவுக்கு வாடகைத்தாய் மூலம் அம்மாவாகும் ஐடியாவைக் கொடுத்ததே ஷாருக்கானாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். (வாடகைத் தாய் மூலம் ஆப்ராமுக்குத் தந்தையானார் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.)

ரசிகர்கள் நன்றாகவே ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. நடக்கட்டும்! நடக்கட்டும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com