யோகிபாபு
யோகிபாபு

யோகிபாபுவின் 'பொம்மை நாயகி'!

இயக்குனர் ஷான் எழுதி இயக்கியுள்ள படம் 'பொம்மை நாயகி'. 'கோலமாவு கோகிலா', 'மெர்சல் ', 'கோமாளி ','லவ் டுடே' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பா.ரஞ்சித்தின் நீலம் புரோடுக்ஷன் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைக்க அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பொம்மை நாயகி' ஒரு தந்தை மற்றும் மகளின் வாழ்கையில் சமூகம் மற்றும் அரசியல் அவர்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றி கூறும் கதை. கடலூர் கடற்கரையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதியும் நடித்திருக்கிறார்.

பொம்மை நாயகி
பொம்மை நாயகி

சமீபத்தில் 'பொம்மை நாயகி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது . 'அடியே ராசாத்தி ' என்ற பாடலும் படத்தின் ரிலீஸ் தேதியும் தற்போது வெளியாகியுள்ளது. 'பொம்மை நாயகி' படத்தை வரும் பிப்ரவரி 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com