இயக்குநர் சங்கரின் இந்தியன் 2, RC 15 படங்கள் குறித்த புத்தம் புது அப்டேட்!

இயக்குநர் சங்கரின் இந்தியன் 2, RC 15 படங்கள் குறித்த புத்தம் புது அப்டேட்!

இயக்குநர் சங்கர் தற்போது கமல் ஹாசனின் இந்தியன் - 2 மற்றும் ராம் சரண் தேஜாவின் RC 15 எனும் 2 திரைப்படங்களுக்கான வேலைகளில் இடைவெளி இன்றி மூழ்கி இருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களுக்கான வேலைகளும் அக்கட பூமியில் தான் என்பதால் இயக்குநர் அங்கேயே இருந்து அசராமல் படவேலைகளில் பிஸியாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தியன் 2 க்கான படப்பிடிப்பு வேலைகள் திருப்பதி மலைக் காடுகளிலும் RC 15 படத்துக்கான வேலைகள் ஹைதராபாத் சார்மினார் பகுதிகளிலும் நடந்து வருகின்றன.

RC 15 திரைப்படத்தில் ராம் சரண் இடம்பெறும் பகுதிகளுக்கான படப்பிடிப்பு இனி கர்நூலில் தொடங்கவிருப்பதால் அதற்கான செட்டில் இயக்குநருடன் ராம் சரண் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கோலிவுட் வட்டாரச் செய்திகள் தெரிவிப்பது என்னவென்றால் நாளை முதல் சென்னை ஆதித்ய ராம் ஸ்டுடியோவில் இந்தியன் -2 திரைப்படத்துக்கான இறுதி கட்டப் படப்பிடிப்புகள் ஒரே மூச்சில் 30 நாள் ஷெட்யூலில் நடத்தி முடிக்கப்பட இருக்கின்றன என்பதே.

ராம் சரண், தான்… தற்போது RRR படத்துக்கான ஆஸ்கர் விருது பிரச்சாரத்திற்காக அமெரிக்காவில் பிஸியாக இருப்பதால் மார்ச் 12 வரை தன்னால் படப்பிடிப்பு வேலைகளில் கலந்து கொள்ள முடியாது. எனவே இயக்குநர் சங்கர் மார்ச் மாதத்தின் நடுப்பகுதி இந்தியன் -2 திரைப்படத்துக்கான வேலைகளையே அவர் தொடரலாம் எனத் தெரிவித்துள்ளதாகத் தகவல்.

RC 15 திரைப்படம் தெலுங்கில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நேரடியாக வெளியாகவிருக்கும் முதல் திரைப்படம் எனலாம். இதுவரை சங்கர் இயக்கிய படங்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளனவே தவிர நேரடி தெலுங்குப் படம் எதையும் அவர் இதுவரை இயக்கியிருக்கவில்லை. அந்தவகையில் சங்கருக்கு இதுவே முதல் தெலுங்குத் திரைப்படம்.

இத்திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானியுடன், எஸ் ஜே சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், ஜெயராம், சமுத்திர கனி உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் பெறுகிறார்கள். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளி வரவிருக்கும் இத்திரைப்படத்திற்கு இசை எஸ் எஸ் தமன். கதை கார்த்திக் சுப்புராஜ்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com