சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்... திடீரென மாற்றப்பட்ட 'மாவீரன்' பட ரிலீஸ் தேதி!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மாவீரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை, படக்குழுவினர் அதிரடியாக மாற்றி, ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர்.
'மண்டேலா' திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற்ற மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மாவீரன்'. இப்படத்தை சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அதிதி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு, சுனில் மற்றும் சரிதா ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துதுள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்துவருகிறது. அதோடு, ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் ரிலீஸாகும் என தகவல்களும் வெளியாகின.
அதன்பிறகு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவலும் பரவியது. இதையடுத்து 'மாவீரன்' படத்திற்கு நெருக்கடியும் ஏற்பட்டது.
இந்நிலையில், 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடவிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வை வெளியிட்டனர்.

தலைவரின் 'ஜெயிலர்' படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவதால், தியேட்டர் கிடைப்பதில் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படத்தை ஜூலை 14ம் தேதியே வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதையடுத்து, தலைவரின் 'ஜெயிலர்' படம் ரிலீஸ் காரணத்தால், ஒரு மாதம் முன்னதாகவே சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் ஆவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.