சிரஞ்சீவி ஆட்டம் போட்ட 'பாஸ் பார்ட்டி...' லிரிக்கல் வீடியோ!

சிரஞ்சீவி ஆட்டம் போட்ட 'பாஸ் பார்ட்டி...' லிரிக்கல் வீடியோ!

சிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும், 'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் 'வால்டேர் வீரய்யா' படத்தில் இடம்பெற்ற 'பாஸ் பார்ட்டி...' எனத் தொடங்கும் இரவு விருந்துக்குரிய பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. வெளியான குறுகிய காலத்தில் இந்தப் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் சிரஞ்சீவி மீதான தன்னுடைய அபிமானத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடலை ராப் இசை பாணியில், இசையமைத்து, எழுதி, பாடியிருக்கிறார். 'பாஸ் பார்ட்டி...' பாடல், டி.எஸ்.பி. பாணியில் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய பாடலாக வெளியாகி இருக்கிறது. இதற்குப் பின்னணி பாடகர் நகாஷ் அஜீஸ் மற்றும் பாடகி ஹரிப்ரியாவின் குரல்களும் இணைந்து இரட்டிப்பு இன்னிசையை வழங்கி இருக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பாடலுக்கான மெட்டை விறுவிறுப்பாகவும், முழு நேர பொழுதுபோக்கு அம்சங்களுடனும் உருவாக்கி இருப்பதால், இந்தப் பாடலை கேட்டவுடன் அனைவருக்கும் பிடிக்கும்.

இந்தப் பாடலுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில், சிரஞ்சீவி தன்னுடைய அற்புதமான நடன அசைவுகளால், பாடலை மேலும் அழகு சேர்த்திருக்கிறார். அவருடன் இணைந்து நடனமாடியிருக்கும் நடிகை ஊர்வசி ரௌத்லாவும், அவருக்கு இணையாக நடனமாடி ரசிகர்களை கவர்கிறார். இந்தப் பாடலுக்கான நடனத்தை, நடன இயக்குநர் சேகர் பிரத்யேகமாக வடிவமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமான வேடத்தில் ரவி தேஜாவும் நடித்திருக்கிறார்கள். ‘மைத்ரி மூவி மேக்கர்’ சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ஜி. கே. மோகன் இணை தயாரிப்பாளராகவும், ஏ. எஸ். பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, நிரஞ்சன் தேவராமனே படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com